• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

3 நாட்கள் தடை எதிரொலி: பழனியில் குவிந்த பக்தர்கள்

Byகாயத்ரி

Jan 7, 2022

தைப்பூச நேரத்தில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத் துக்கு அனுமதி கிடையாது. என்ற அரசின் அறிவிப்பால் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டனர்.


கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழி பாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி யில் தைப்பூசத் திருவிழா ஜன.12 -ல்கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பழநி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.


பழநி நோக்கி வந்த பக்தர்கள் பாதி தூரம் கடந்த நிலையில், அவர்கள் பழநி வந்தடைய ஒரு நாளுக்கு மேலாகி விடும். அவ்வாறு வந்தாலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இதனால், மூன்று நாட்கள் காத்திருந்து திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புவது என்பது சிரமமானதாகும். இதனால் பழநிக்கு பாதயாத்திரை யாக நடந்து வந்த பக்தர்கள் பலர் பேருந்தில் ஏறி பழநி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மேலும், சபரிமலை சென்று திரும்பும் பக்தர்களும் அதிகம் பேர் பழநி மலைக்கோயிலுக்கு வந்ததால் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மூன்று தினங்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் நேற்று திரண்டனர்.