• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் 2வது முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

BySeenu

Jan 18, 2024

ஜெம் அறக்கட்டளை வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகத்தில் இரண்டாம் முறையாக பெண்களுக்கென இரவு நேர மாரத்தான் போட்டி நடத்துகிறது. பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஜெம் மருத்துவமனை அரங்கில் வெளியிட்டார். இந்த T-Shirt வெளியீட்டு நிகழ்வில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேல், டாக்டர். பிரவீன் ராஜ் தலைமை செயல் அதிகாரி, பிரபா பிரவீன்ராஜ் இணை நிர்வாக இயக்குனர் உட்பட ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டி குறித்து பேட்டியளித்த, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேலு அவர்கள் ஜெம் அறக்கட்டளை, கோவை மாநகர காவல் மற்றும் தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேஷன் அங்கீகாரத்தின் மூலம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி பெண்களுக்கான மாரத்தான் போட்டி, மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இது வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் இது தமிழகத்தில் இரண்டாம் முறையாக இரவு நேரத்தில் நடைபெறுகின்ற மாரத்தான் போட்டி எனவும் தெரிவித்தார். 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3,5,10 கிமீ தூரம் மாரத்தான் போட்டியின் நடத்தப்பட உள்ளதாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்துவதாகவும் குறிப்பாக பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, கர்ப்பப்பை பகுதியில் ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான சத்துள்ள உணவுகள், யோகா பயிற்சிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட்ட உள்ளதாகவும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். www.coimbatorewomensmarathon.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.