விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பையை வாங்கி போலீசார் சோதனை நடத்தினர் .

அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக தலா 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விஜயரெங்கபுரத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 42) ,விஜயன் (வயது 45) என தெரிந்தது .இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.