• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிறுவர்கள் வாகன ஓட்டினால் 25,000 ரூபாய் அவதாரச் சட்டம்… தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ..!

Byதரணி

Jun 1, 2024

18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது, வாகனத்தின் ஆர்.சி. ரத்து என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு விடுத்தனர்.

ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவித்த நிலையில், தமிழகத்தில் அமல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 4க்கு பிறகு இந்த நடைமுறைக்கு அமலுக்கு வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.