• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வேடச்சந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு துவக்கம்..!

ByIlaMurugesan

Dec 28, 2021

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் செந்தொண்டர் பேரணியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23வது மாநாடு வேடசந்தூரில் துவங்கியது.


இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நிகழ்ச்சி ஆத்துமேட்டில் நடைபெற்றது. தோழர்கள் முத்துக்கருப்பன், முத்துராஜ் ஆகியோர் நினைவாக கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடி, கம்பம் மற்றும் சுப்ரமணி, தெண்டாயுதம்இ ரெங்கசாமிஇ வின்சென்ட்இ மரியதாஸ்இ ஜேம்ஸ்இ சிவராஜ்இ நாகம்மாள்இ சாந்தாம்மாள்இ ஆண்டாள் ஆகியோரின் நினைவு ஜோதி ஆகியவ்றறை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் காமராஜ்.என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எம்.ஆர்.முத்துச்சாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.


இதனையடுத்து மாநாடு நடைபெறும் எம்.பி.மகாலுக்கு ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றனர். இதனையடுத்து மாநாட்டில் தியாகிகள் நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தினர். மாநாட்டுக்கு கே.ஆர்.கணேசன், ஆர்.வனஜா, ஏ.அரபுமுகமது ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார்.


திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு வைகை பெரியாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்பி வேளாண் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2வது நாள் மாநாட்;டில் பங்கேற்று மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச உள்ளார். வேடசந்தூர் செயலாளர் பெரியசாமி நன்றி கூறுகிறார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள்;இ மாவட்டக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய நகரச்செயலாளர்கள், உறுப்பினர்கள், கிளைச்செயலாள்ர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள்; பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.