கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தல் முயன்ற 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார்கள் 3 பெண்கள் உட்பட 4பேர் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் உடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் சந்தேகப்படும் படியாக சாக்குபையுடன் நின்றிருந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை பிடித்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், போலீசார்கள் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டபோது, அதில் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த செல்வம் (45), உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி (40), முத்துலட்சுமி (42), கொடைக்கானலைச் சேர்ந்த கற்பகவள்ளி (42) ஆகியோர் என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி, கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வம், பாண்டீஸ்வரி, முத்துலட்சுமி, கற்பகவள்ளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)