விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிகுளம் கிராமத்தில் உள்ளது அரிய நாச்சியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 450-க்கு மேற்பட்ட காளைகள் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர். முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக 25 வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் கட்டில், வெள்ளி நாணயங்கள், உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியினை திருச்சுழி போலீஸ் டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.