• Thu. Feb 13th, 2025

200 ஆண்டுகள் வாழ்வேன் நித்யானந்தாவின் அடுத்த புருடா..!

Byadmin

Aug 5, 2021

மீடியாக்களுக்கு நல்ல தீனி போடுபவர் யார் என்றால் நம்ம நித்தியானந்தா தான். இந்த உலகில் அதிகம் பேசப்பட்ட விளம்பர பிரியர் நித்யானந்தா தான். நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அடித்த லூட்டிகள் குறித்து தொலைக்காட்சிகளில் பேசப்பட்டது. முதல் மதுரை ஆதீன ஆசிரமத்தை கைப்பற்றுதல், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு ‘கைலாசா’ என்று பெயர் வைத்தது வரை நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் மக்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் இன்றும் நகைச்சுவைக் காட்சிகளாக வலைத்தளத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே அந்தரத்தில் பறக்கும் குண்டலினி யோக கலையை கற்றுக்கொடுத்ததில் இந்தியாவில் பலர் கிறுக்கு பிடித்து எப்படியாவது குண்டலினி யோகத்தைக் கற்று அந்தரத்தில் பறக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவோ விமானம் மூலம் தான் தப்பிச்சென்றார் என்று பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்க்க அவரது சீடகோடிகள் மறுக்கிறார்கள். இந்த நிலையில் தான் 200 ஆண்டுகள் வாழ்வதற்கு உடலை தயார் செய்துகொண்டிருக்கிறேன் என்று அடுத்த புருடாவை ஆரம்பித்திருக்கிறார்.


இதுகுறித்து அவர் உரையாற்றிய வலைத்தளத்தில் வைரலாகி உள்ள வீடியோவில் நித்தியானந்தா பேசியதாவது. 200 ஆண்டுகள் வாழ்வதற்கு கடந்த 2 நாட்களாக நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னால் 126 வயது வரை வாழ்வது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது அதனை நீட்டித்து 200 ஆண்டுகள் வாழ்வதற்கு முடிவெடுத்துள்ளேன்.

நான் எனது உடலை இயக்கி 200 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வேன். ஒரு விசயத்தை நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாகரீகம் பூமிக்கு மேல் இருப்பது போல பூமிக்கு கீழேயும் உள்ளது. பூமி என்பது திடப்பொருட்களால் ஆனது இல்லை. வெற்றிடமாக உள்ளது. வேற்றுலக மனிதர்கள் பூமிக்குள் நுழைந்து அதனை பாதுகாத்து வருகிறார்கள். கைலாசத்திலிருந்து பூமிக்கு வந்த அருணகிரி யோகீஸ்வரா பூமிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொண்டதற் கிணந்த எனது உடலை 200 ஆண்டுகள் வாழ்வதற்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் ஒரு வேற்று கிரகவாசி. மனித கூட்டத்திற்கு அப்பாற்பட்டவன். அற்புத சக்திகள் கொண்ட டி.என்.ஏ எனது உடலுக்குள் உள்ளது. எனவே நான் 200 ஆண்டுகள் வாழ்வதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

என்று நித்யானந்தா பேசுகிற வீடியோ வைரல் ஆகி வருகிறது. இனி காலையில் எழுந்ததும் எப்பா நாம் மனித சக்திக்கு அப்பாற்பட்ட யோகிகளாக மாறுவது என்று பைத்தியமாக பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். இது குறித்து ஆன்மீக வாதிகளிடம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு 56 இன்ச் பாடிகளும் ரகசியமாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்க சொல்லுங்க.. மனுசங்களை கிறுக்கு பிடிக்க வைக்கிறதுல நம்ம நித்யானந்தாவை மிஞ்சிக்க ஆளே இல்லை. மனோ தத்துவ டாக்டர்கள் எல்லாம் கைலாசாவிற்கு சென்று பயிற்சி எடுத்து வாருங்கள். அப்போது தான் நீங்கள் இங்கிருக்கும் பைத்தியங்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.