விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் இராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் அடங்கிய குழுவினர்
ஆர் ஆர் பிரியாணி கடையில் சோதனை செய்தபோது ஃப்ரைடு ரைஸ் தயாரிக்க நேற்று முன்தினம் சமைத்த சாதம். பழைய புரோட்டா மாவு .கெட்டுப்போன மட்டன் சிக்கன் என 20 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர் .

மேலும் அட்டை மில் முக்க ரோடு எ..ராமலிங்கபுரம் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் பிரியாணி தயார் செய்வதற்காக கிச்சன் செயல்பட்டு வந்துள்ளது அந்த கிச்சன் அருகே கோழி பண்ணை இருப்பதால் அதிலுள்ள தூசிகளும் கழிவுகளும் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறி உரிய ஆவணம் இல்லாமல் கிச்சன் மூடப்பட்டது .மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பிரியாணி கடையில் குளிர்பானங்கள் இனிப்புகள் தயார் செய்யவும் அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர் .

உரிய ஆவணங்களை பெற்ற பின்பு குளிர்பானங்கள் இனிப்பு வகைகள் தயார் செய்ய வேண்டும் கிச்சன் நடத்துவதற்கு சுத்தமான சுகாதாரமான இடத்திற்கு அனுமதி பெற்று நடத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.





