திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் எஸ்.கே.நகரில் வசிக்கும் 67 குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேடசந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
சிபிஎம் சார்பாக மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், கே.அருள்செல்வன். டி.முத்துச்சாமி, மலைச்சாமி, சம்சுதீன், ஜமால்முகமது, குணசேகரன். ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் திமுக சார்பாக கருப்பன், கணேசன், காங்கிரஸ் சார்பில் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டா கிடைத்ததால் எஸ்.கே.நகர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.