• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

2 மாதம் ஒருமுறை எண்ணப்படும் உண்டியல்கள்..,

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உண்டியல்கள் 2 மாதம் ஒருமுறை எண்ணப்படும். குமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மற்றும் இணை ஆணையாளர் (பொறுப்பு) ஜான்சிராணி முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், கோயில் மேலாளர் செந்தில் குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.