திண்டுக்கல்லில் இன்று நகரின் மையப் பகுதிகளான கல்லறைத் தோட்டம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் நல பணியாளர்கள் தமிழக அரசை கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பணி நிரந்தரம் செய்யும் ஆணையை வெளியிட வலியுறுத்தியும், வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து ரயில் மூலமாக காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மக்கள் நல பணியாளர்கள் 19 பேர் கைது. இதில் 15க்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர். 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திண்டுக்கல் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கல்லறைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குவிப்பு. தீயணைப்பு வாகனமும் அனைத்து பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் வரும் மக்கள் நல பணியாளர்களை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்து வருகின்றனர். மேலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்த மக்கள் நல பணியாளர்களை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.