சிவகங்கை அருகே இடையமேலூரில் ஶ்ரீலஶ்ரீ மாயாண்டி சித்தரின் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம், உத்திர நட்சத்திரத்தில் மாயாண்டி சித்தர் ஜீவசமாதி அடைந்த தினத்தை குருபூஜை விழாவாக அவரது பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். 17 ஆம் ஆண்டாக நடைபெறும் குருபூஜை விழாவினை முன்னிட்டு சித்தர் அறக்கட்டளை சார்பில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாமியார்கள் கலந்து கொள்வது சிறப்பு. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மாயாண்டி சித்தரின் வழிபாடு செய்தனர்.
இங்கு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்தது கை கூடும் என்ற ஐதீகத்தின்படி பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இடையமேலூர் கிராம மக்கள் மாயாண்டி சித்தரை மகாலிங்க ஈஸ்வரனின் அவதாரமாக நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நாள்தோறும் அன்னதானம் வழங்க நடைபெறுவது வழக்கம். குருபூஜை விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை இடையமேலூர் மாயாண்டி சித்தரின் 17ஆம் ஆண்டு குருபூஜை விழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..,
