காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் முருகானந்தம், செல்வகுமார், ராஜேஷ், ராஜேஷ், குணசேகர், ஞானவேல் உள்ளிட்ட காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த ஏழாம் தேதி காரைக்கால் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை கோடியை கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகில் பிரபலரில் கயிறு மாட்டி படகு பழுதாகினது பழுதானது. பழுது நீக்கும் பணியை செய்து கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தவுடன் விசைப்படகும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனர்களையும் விசைப்பலகையும் மீட்டு தர வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகும் 12 மீன்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்திற்குள்ளாக 29 மீனவர்கள் ஒரே கிராமத்தில் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.