• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

16வது ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐ திட்டம்…

Byகாயத்ரி

Sep 23, 2022

2023ம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், ஆனால் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏலத்திற்கான சம்பள பர்ஸ் 95 கோடி ரூபாய், கடந்த ஆண்டை விட 5 கோடி அதிகம், அதாவது ஒவ்வொரு அணியும் தலா ரூ.95 கோடி வரை செலவிடலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது.

ஒரு அணி, அதன் வீரர்களை விடுவித்தால் அல்லது அவர்களை ஏலத்தில் விட்டால் பர்ஸ் மேலும் அதிகரிக்கக்கூடும். ஐபிஎல் லீக்கிற்கான தேதிகள் இன்னும் தெரியவில்லை, ஆனால், ஐபிஎஸ் தொடர் மார்ச் நான்காவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையில், ஐபிஎல் 2023 தொடர் இந்தியாவிலேயே நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதுவும் ஐபிஎல்-லில் பங்கேற்றுள்ள 10 அணிகளும், தங்களது சொந்த மைதானத்தில் ஒவ்வொரு அணியுடனும் ஒரு போட்டி விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகள் குறைவான இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டன. 2022-ஆம் ஆண்டு மும்பை மற்றும் புனேவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், பின்னர் யுஏஇயிலும் நடைபெற்றுது. 2020 ஐபிஎல் முழுவதுமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. மேலும், பெண்கள் ஐபிஎல் குறித்து கங்குலி கூறியதாவது, மகளிர் ஐபிஎல் தொடருக்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் சீசனை தொடங்குவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

இது குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் தொடரும். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏஜிஎம்மில் பிசிசிஐ இந்த விவகாரத்தை பரிசீலிக்கும். பொதுக்குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.