• Thu. Dec 12th, 2024

உலக சாம்பியனை வீழ்த்திய 16 வயது சிறுவன்…

Byகாயத்ரி

Feb 21, 2022

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன்னை சந்தித்த அவர், 39-வது நகர்வில் வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.15 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 8 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 12-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவனின் சாதனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.