பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்னா to எர்ணாகுளம் ரயில் மூலம் கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்று இருந்த பையில் 16.00 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.