• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

ByA.Tamilselvan

Sep 11, 2022

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் 15 ம் தேதி அவரது சிலைக்கு மாலைதூவி மரியாதை செலுத்துகிறார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் – பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.