மதுரை மாவட்டம் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சோழவந்தானில் உள்ள வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சார்பில் அதன் நிர்வாகிகள் வ உ சி யின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் முன்னதாக உறவின்முறை சங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர் தொடர்ந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். திமுக சார்பில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி வக்கீல் முருகன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி நிஷா முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் நல்லதம்பி பொருளாளர் பேட்டை கண்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஐயப்பன் கலாவதி ராஜா விவசாய அணி பேருர் துணைச்செயலாளர் சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் முட்டை கடை காளி முள்ளி பள்ளம்ஜீவாபாரதி ஞானசேகரன் வக்கீல் சுரேஷ் டாஸ்மாக் பொன்முடி செங்குட்டுவன் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா இளைஞரணி கேபிள் மணி மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் முள்ளிப்பள்ளம் நாகு ஆசாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினி நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் முத்துராமன் குரு ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதி ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பிச்சைமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதே போல் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பில் அதன் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம் வானவேடிக்கை பேண்டு வாத்தியம் வ உ சி யின் சுதந்திர போராட்ட உரைகளை விளக்கும் சொற்பொழிவு வ உ சி போல் வேடமணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர். தொடர்ந்து வ உ சி யின் சிலைக்கு பூக்கள் தூவி மரியாதை செய்தனர் சிலை முன்பு சொற்பொழிவு கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.