• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்ட பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு தூய்மை சேவை குறித்து 15 நாட்கள் தூய்மைப்பணித் திட்ட விழிப்புணர்வு தொடக்கம்

ByJeisriRam

Sep 17, 2024

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் தூய்மையே சேவை 2024 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2 தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தூய்மை பணிகள் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

இதனை பேரூராட்சி இயக்குனர் ஆணையின்படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முன்னிலையில் அனைத்து பேரூராட்சிகளிலும் இத்திட்டம் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக உத்தமபாளையம் பேரூராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சியின் துவக்கம் உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. பள்ளி மாணவ, மாணவியர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உத்தம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பேரணியாக சென்று பொது மக்களுக்கு திடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டாமல் பேரூராட்சி வாகனங்களில் கொடுக்கவும், கழிவுகளை தரம் பிரித்துக் கொடுக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க கூடாது எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.எஸ்.முகமது அப்துல் காசிம் துவக்கி வைத்தார்கள். எஸ்.ஏ.பி. பள்ளியின் முதல்வர் முகமத் ஜியா உல் ஹக் மற்றும் பேரூராட்சியின் செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர் .

மேலும், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் மேற்கொண்டு தொகுத்து வழங்கினார். பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், சுய உதவிகுழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தூய்மையே சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.