பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம், dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மே 14, 2024 அன்று 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1 தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிக்கும். முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பிளஸ் 1 முடிவு சாளரத்தில் உள்ளிட வேண்டும். தேர்வு முடிவு வெளியான பின், துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு வெளியாகும்.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு பிளஸ்; 1 தேர்வு முடிவுகள் மே 19, 2023 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
