• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொறியியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா

ByKalamegam Viswanathan

May 3, 2025

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள் கல்லூரி காமராஜர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் ஐ ஆர் எஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம் பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் அல்லி வரவேற்புரை கூறினார். கல்லூரி தாளாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் 378 மாணவர்கள் பொறியியல் துறையின் சார்பாக பட்டம் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர் அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை விருந்தினர் நம்பெருமாள் சாமி பேசியதாவது..,

உங்கள் பட்டபடிப்பு முதல் படிதான் வாழ்கையை துவக்க வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். நம்பிக்கை தான் வாழ்கை நம்பிக்கையுடன் உங்கள் பயணத்தை துவங்குங்கள். சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக, தொழில் முனைவோராக, உங்களுக்கான வாய்புகள் நிறைய உள்ளது. உங்கள் நம்பிக்கை தான் உங்களை சாதனைகள் புரிய தூண்டும்.

நமது இந்தியா, இந்தியாவில் 6ம் ஆறாம் நூற்றாண்டிலே தச்ச சீல பல்கலைக்கழகம் நாலந்தா பல்கலைக்கழகம் என கல்வியில் மேம்பட்டு இருந்தோம். வானவியல் சாஸ்திரம். கட்டிடக்கலை, கணிதம் பூஜ்ஜியம் ஆகியவற்றில் நாம் முன்னிலையில் இருந்தோம்.

நாம் எத்தனை நாள் வளர்ச்சியயையும். நாடாக இருப்பது. வளர்ந்த நாடாக மாற்ற உங்களை போன்ற இளைஞர்கள் தான் முடியம் சிறப்பு விருந்தினர் நம்பெருமாள் சாமி கூறினார்.

மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் IRS மாணவர்களிடம் சிறப்புரையில்..,

நமது இந்தியா இந்தியாவில் 6ம் நூஆறாம் நூற்றாண்டிலே தச்ச சீல பல்கலைக்கழகம் நாலந்த பல்கலைக்கழகம் என கல்வியில் மேம்பட்டு இருந்தோம் மாணவியர் சாஸ்திரம் மாணவியல் சாஸ்திரம் கணிதம் பூஜ்ஜியம் ஆகியவற்றில் நாம் முன்னிலையில் இருந்தோம்.

நாம் எத்தனை நாள் வளர்ச்சியயையும். நாடாக இருப்பது. வளர்ந்த நாடாக மாற்ற உங்களை போன்ற இளைஞர்கள் தான் முடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அரசு பள்ளியில் படித்து பெறியியல் படித்து இன்று வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளேன். நாம் பல்வேறு கனவுகளில் வாழ்கிறோம். உங்கள் வாழ்கையில முக்கிய மைல்கல்லை எட்ட இந்த படிப்பு அடிப்படை மட்டுமே.

நமது பொருளாதார வளர்ச்சி வளர்சியடைந்த நாடுகளுக்கு போட்டியாக உள்ளது. நாம் உலக நாடுகளுக்கு போட்டியாக உள்ளோம். இந்தியாவில் பல்வேறு சிறப்பான வேலைகள் உள்ளது. நமது புது கண்டுபிடிப்புகள்.

பொறியியல் மாணவர்கள் இந்திய ஆட்சி மொழி தேர்வுகளில் வெற்றி பெற்று அதிகாரிகளாக வர வாய்புகள் அதிகம் உள்ளது.

இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளது.
இளைஞர்கள் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்த வேண்டும் என வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கூறினார். பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் இந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் இயன்ற உதவிகளை செய்து வளமடைய செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.