• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ-வில் கைது !!!

BySeenu

Apr 15, 2025

13 வயது சிறுமியை கடத்திச் செல்லப்பட்டு திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது தொடர்பாக போக்சோ வில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது 13 வயது மகளுடன் அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்து உள்ளனர். இதற்கு இடையே கடந்த சில நாட்களாக மகளைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டின் அருகே வசித்து வந்த மில் தொழிலாளி ராபர்ட் கிளைவ் என்பவரையும் காணவில்லை, என்பது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராபர்ட் கிளை சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாளையில் பணியாற்றி வந்ததும் அவருடன் சிறுமி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக ராபர்ட் கிளைவை பிடித்து விசாரித்தனர். இதில் திருமணமாகாத அவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று உள்ளார்.

பின்னர் சிறுமையை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராபர்ட் கிளைவ் போலீஸார் கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.