• Mon. May 13th, 2024

கோவையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

BySeenu

Mar 1, 2024

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் தேர்வு மையங்களை ஆய்வு செய்ததோடு, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்..,

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார். மன அழுத்தம் இன்றி மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளர் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *