உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மல்லசமுத்திரம் சர்வேஸ் கிளினிக் மற்றும் சேலம் விம்ஸ் மருத்துவமனை சார்பில் 1100 மாணவ, மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட மராத்தான் போட்டி மல்லசமுத்திரத்தில் நடைபெற்றது 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர்,மூன்று கிலோமீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. ஓசூரை சேர்ந்த விஜய் என்பவர் 5 கிமீ தூரத்தை பின்பக்கமாக ஓடியது அனைவரயும் கவர்ந்தது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள சர்வேஷ் கிளினிக் மற்றும் சேலம் விம்ஸ் மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகள் சார்பில் 10 கிலோ மீட்டர் 5 கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் பிரிவுகளில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மராத்தான் போட்டிகள் நடைபெற்றது. மல்ல சமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிகளை விம்ஸ் மருத்துமனை மேலாண்மை இயக்குனர் மீனாட்சிசுந்தரம் சர்வேஷ் கிளினிக் மருத்துவர் திவ்யா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் முதலில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான போட்டிகள் துவங்கி வைக்கப்பட்டது. அதனை அடுத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கான போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதனை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மராத்தான் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மல்லசமுத்திரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வையப்பமலை சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திலும், 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கும், 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சென்று திரும்பும் விதமாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. மல்ல சமுத்திரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு சிறுவர், சிறுமியர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி சொந்த ஊராகக் கொண்ட ஓசூரில் பி சி ஏ படித்து வரும் மாணவர் விஜய் என்பவர் ஐந்து கிலோ மீட்டர் தூர பந்தயத்தை பின்பக்கமாக ஓடிக் கடந்தது. பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.