புதுச்சேரியில் பாஜக பிரமுகரும் பிரபல லாட்டரி தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமாசங்கர் கடத்த 26 ஆம் தேதி கருவடி குப்பத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பந்தமாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட உமாசங்கரின் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இந்திய கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் , மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை ராஜ் நிவாசில் சந்தித்து சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்…
புதுச்சேரியில் பத்திரப்பதிவுத்துறை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் ஊழல் அதிக அளவில் நடந்துள்ளது இதில் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதிகாரிகளுக்கு துணை போகும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து நிலத்தகராவில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஆனால் பிஜேபியினரே சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள் இதில் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் எனவே பிஜேபி பிரமுகர் படுகொலைக்கு சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.