• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

11 பேர் பலியான தேர் திருவிழா -அரசியல் தலைவர்கள் இரங்கல்

ByA.Tamilselvan

Apr 27, 2022

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு அரசியக் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் உயர் அழுத்த மின் கம்பத்தில் தேர் உரசி தீப்பற்றியதில் தேரை வடம் பிடித்து இழுத்த 11 பேர் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடியும்தனது இரங்கலை தெரிவித்திருப்பதோடு ரூ2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.அதேபோல உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.
இந்த விபத்து குறித்து தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் தமது இரங்களைதெரிவித்து வருகின்றனர்
எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


“தஞ்சாவூர்,களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில்
, “தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் ம‌ற்று‌ம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி!!” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் பதிவில்,


“தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்! ” என பதிவிட்டு உள்ளார்.
சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில்,


“தஞ்சை,களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,


“தஞ்சாவூர் மாவட்டம்,களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை சோகம்குறித்து மேலும் பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்துவருகின்றன.