• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று வெளியாகிறது 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்!

Byகாயத்ரி

Aug 23, 2022

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது.
இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை இன்று மதியம் 3 மணியளவில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் ஆகஸ்டு 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பாடம் ஒன்றிற்கு ரூ.205 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.