• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தோ, தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், 44 வார கால பயிற்சி முடித்த, 1084 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி…

ByG.Suresh

Aug 30, 2024

சிவகங்கை அருகே இந்தோ தீபெத்திய எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 44 வார கால பயிற்சி முடித்த 1084 வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையமானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு உடல் பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல், கள பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் 44 வார காலத்திற்கு அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய எல்லை பகுதியில் பணிக்கு அனுப்ப படுகின்றனர். இந்நிலையில் இன்று இந்த மையத்தில் 488 பேட்ச் பயிற்சி வீரர்கள் 44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் அனிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த வீரர்கள் தேசிய கொடியை ஏந்தி வீர நடை நடந்து சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் ஐ.ஜி நிர்பய் சிங் கலந்து கொண்டதுடன் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார். பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.