• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…

Byகாயத்ரி

Jun 24, 2022

ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் பேட்டரி உற்பத்தி நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி, தங்களின் புதிய பேட்டரியின் உற்பத்தியை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய பேட்டரியின் கண்டுபிடிப்பால், ஒரே நாளில் அவர்களின் பங்கு மதிப்புகளானது, 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.