• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

100 நாள் வேலை வாய்ப்பு நிதி ஒதுக்கீடு..,

ByVasanth Siddharthan

May 1, 2025

மே தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று 01.05.25 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப் பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களின் கோரிகாகைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

தமிழக அரசு தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் எத்தனை கடிதம் மேலும் கொடுத்த அழுத்தம் காரணமாகவும், போராட்டம் காரணமாகவும் தான் மத்திய அரசு 4 மாதம் கழித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ள து.

இதனைத் தொடர்ந்து வேலையும் சம்பளமும் வழங்கப்பட உள்ளது. மேலும் சம்பளமும் உயர்ந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.

*தமிழக முதல்வர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் அதில் எந்த சந்தேகமும் கிடையாது கிராமம் முழுவதும் மக்கள் எழுச்சியாக உள்ளனர் உறுதியாக வெற்றி உறுதி.

மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவிற்கு முதல்வர் கருத்து தான் எனது கருத்து முதல்வர் விளக்கமாக கூறியுள்ளார் என கூறினார்.