தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், சிவகங்கை நகராட்சி மேம்பாட்டிற்கு 100கோடி நிதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் நன்றி தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது.
சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்,
இக்கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்..,
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பழமை வாய்ந்த மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு புதிய நகராட்சி அலுவலகம், குடிநீர், சாலைகள் (பேவர்பிளாக் — சிமெண்ட் காங்கிரீட் — தார் சாலை) மேம்படுத்தவும், பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை செப்பனிடவும், பாதாள சாக்கடைகள், மின்விளக்குகள், மழைநீர் வடிகால்வாய் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூபாய் 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
மேலும் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, நேரடியாக தலைமைச் செயலகம் சென்று உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மணு அளித்தோம். இந்நிலையில் சட்டமன்றத் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் வரவிருக்கும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையில் நிச்சயம் நமது சிவகங்கை நகராட்சிக்கு 100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழக முதல்வருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்களும் நன்றி தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையர் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.