• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஷிப் தங்கம் வென்ற 10 வயது சிறுவனுக்கு மதுரையில் பாராட்டு விழா

ByKalamegam Viswanathan

Feb 11, 2024

மதுரை சேர்ந்த முத்துக்குமார் -சுஜிதா தம்பதியின் மகன் அஸ்வஜித். மதுரை தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் (அண்டர் லெவன்) கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் மதுரையில் இருந்து கலந்து கொண்ட இந்த சிறுவன் தேசிய சாம்பியன்ஷிப் கோல்டு மெடல் வென்று சாதனை புரிந்தார்.

அச்சிறுவனுக்கு மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் வைத்து மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அசோசியேஷன் மாவட்ட தலைவர் விஜயகுமார் , செயலாளர் நாகராஜன், பொருளாளர் அபிநயா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் டேபிள் டென்னிஸ் பெடரேஷன் அசோசியேசன் ஆப் இந்தியா முன்னாள் தலைவர் டி.வி.சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்.