கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் பேரூர்-04, கருமத்தம்பட்டி-03, பெரியநாயக்கன்பாளையம்-1, வால்பாறை-1 மற்றும் மேட்டுப்பாளையம்-1 என மொத்தம் 10 இடங்களில் மதுபானக் கடைகளைச் சார்ந்த பார்களில் அரசு உத்தரவுகளை மீறி மது பாட்டில்களை முந்தைய தினமே வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இது சம்மந்தமாக நேற்றைய தினம் வழக்குப் பதிவு செய்தும், சம்மந்தப்பட்ட பார்களுக்கு நிர்வாக அதிகாரிகளுடன் சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அரசு விதிமுறைகளை மீறி இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தி உள்ளார்.