கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது.

இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ், பெருமாள்சாமி உள்ளிட்டோர் தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை ஊழியர்கள் மலைப்பாம்பிற்கு உடல் பரிசோதனை செய்த பின்னர், அடர் வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)