• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் தக்காளி காய்ச்சலால் 10 குழந்தைகள் பாதிப்பு…

Byகாயத்ரி

May 13, 2022

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இரு மாநில எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.