தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் தகுதியான அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரு நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன கடன் ரத்து செய்யப்படும் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என 110 விதியின் படி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பான வெளியிடப்பட்ட அரசாணையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், அரசு ஊழியர்கள், 5 சவரனுக்கு மேல் நகையை பிரித்து வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின் கீழ் நகை கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48 லட்சம் பேரில் 14.6 லட்சம் பேர் மட்டுமே இந்த நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மார்ச் மாத இறுதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார்.