• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வீரன் அழகுமுத்துகோன்-ன் 311-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மூடப்படும் மதுக்கடைகள், பார்கள்.

Byadmin

Jul 9, 2021

வீரன் அழகுமுத்துகோன் பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற 11ம் தேதி கழுகுமலை, கோவில்பட்டி பகுதியில் உள்ள 37 டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் 11.07.2021 அன்று வீரன் அழகுமுத்துகோன்-ன் 311-வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாதவ சமுதாய மக்களால் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/மதுக்கூடங்கள்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (2) ன் படி கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், மற்றும் கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதியிலுள்ள கீழ்கண்ட 37 டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி நாளில் மேற்படி பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில்; மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மேற்கண்ட டாஸ்மாக் மதுபானகடைகளிலிருந்து மதுபான விற்பனை செய்ய அனுமதியில்லை.மேற்குறிப்பிட்ட தினத்தில் அந்த பகுதிகளிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையிலிருந்து மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.