• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஜபருல்லா மறியல்போராட்ட பேச்சால் பரபரப்பு..,

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று வருவாய் துறை சங்கங்ககளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பாக நான்கு புறமும் சாலையில் அமர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…..

இந்த ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருவாய் துறை மற்றும்
பேரிடர்க மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே ஏற்ற வேண்டும்

இந்த மூன்று துறையில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிபளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்காவல்துறை வாகனங்கள் வர தாமதம் ஆனதால் இந்தப் போராட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் ஒப்பாரி வைத்தும் கும்மியடித்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.