• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல்… திரையுலகில் பரபரப்பு!

By

Aug 9, 2021

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து நடத்தி தயாரித்து வரும் இந்த படத்தை, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா , சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஆர்ஜே விஜய், முனீஸ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி அன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டான் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமானது.

தற்போது பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளைத் தொடங்கி ஆனைமலையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங் நடப்பதை அறிந்த ஊர் மக்கள் குவிய ஆரம்பித்தனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த விரைந்து வந்த போலீசாருக்கு படக்குழு அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக விரைந்து வந்த வருவாய்த்துறையினர் கொரோனா காலக்கட்டத்தில் அனுமதியின் ஷூட்டிங் நடத்தி, கூட்டம் கூட்டியதற்காக ரூ.19,400 அபராதம் விதித்தனர்.

அத்தோடு இல்லாமல் படக்குழுவிற்கு தொற்றுத்தடை உத்தரவுக்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்பும் செயல், தொற்றுநோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 31 பேர் மீது ஆனைமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது