• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனா தொற்றுக்குப் பின்.., நடிக்க தயாராகிறார் தமன்னா..!

Byகுமார்

Aug 8, 2021

திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்ட போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார்கள். அதிலும் நடிகை தமன்னா ஒரே மாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பழைய தோற்றத்தை மீட்டெடுத்துள்ளார்.


தமன்னா டிசைனர் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. உடற்பயிற்சி, டயட், யோகா என எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கு தற்போதும் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.