• Tue. Nov 3rd, 2026

குட்டி சாக்கு (எ) சூர்யா படுகொலை செய்த வழக்கு 12 மணிநேரத்திற்குள் 5 பேரை கைது செய்த போலீசார்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிட பகுதியில் நேற்று இரவு வாலிபர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமயநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், மதுரை பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி குட்டிச்சாக்கு (எ) சூர்யா (26) என்பதும் இவர் மீது மதுரை மாநகர் , புறநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த வாரம் 26ம் தேதி ஜாமின் பெற்று சமயநல்லூர் பகுதிகளில் சுற்றி திரிந்ததாகவும், நேற்று இரவு 11.30 மணியளவில் குட்டிச் சாக்கு (எ) சூர்யா தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது சூர்யாவிற்கும் அஸ்வின் (23) என்பவருக்கும் மது அருந்தும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் அஸ்வின் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் சூர்யாவை உருட்டு கட்டை, மற்றும் கம்பியால் தாக்கியுள்ளர், இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சூர்யா துடிதுடித்து இறந்தார்,

பின்னர் அவரது முகத்தை சிதைத்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்திய மதுரை எஸ்.பி.தேவநாதன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

விசாரணையை தொடக்கிய தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொலையில் ஈடுபட்ட 5 வாலிபர்களை 12 மணி நேரத்தில் பிடித்து கைது செய்துள்ளனர்.

கொலையில் கைதானவர்கள் நண்பர்கள் என்பதும் கொலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அஜய் (26) , விஷ்ணு (24), செல்வகுமார் (25), அஸ்வின் (23), சந்துரு (எ) குட்டிமணி (20) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே ரவுடியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.