• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

BySeenu

Nov 29, 2023

கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது… குரும்பபாளையம் பகுதியில் உள்ள , ஆதித்யா கல்விக் குழுமத்தில் நடைபெற்ற இதில், ஆதித்யா கல்விக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் சி.சுகுமாரன் அறங்காவலர் டாக்டர் கே.ஸ்ரீநிதி ஆகியோர் தலைமை வகித்தனர்.இதில். ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்.முனைவர் அனுஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக,, இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர் மற்றும் உயர் கல்வி ஆலோசகரான ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் வருங்காலத்தில், எந்த உயர் கல்வி படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த உயர் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டி பேசினார். மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைசார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வில், வெவ்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.