• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இயக்குநரான முன்னாள் கடற்படை வீரர்… உண்மை சம்பவத்தை தழுவி மிரட்டல் படம்!…

By

Aug 10, 2021

‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா.

இந்திய நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் செய்திருக்கின்றனர்.

அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா” என்ற படத்தை இயக்குகிறார் முன்னாள் கடற்படை வீரரான பிராஷ்.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இயக்குநர் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன்களை உண்மையான ஆபரேஷன் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளார்.

கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவைத்துள்ளார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜும் ஒரு கடற்படை வீரர் தானாம். இந்த படத்தில்

ரகுமான், டினி டாம், பாலாஜி, நாடோடிகள் அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்திருக்கின்றனர். ராகேஷ் பிரம்மானந்தன் இசையமைக்க, ஃபீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.