

மனித வன விலங்கு மோதல் தடுப்பு குறித்து வனத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் மனித விலங்கு மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வனத்துறையினர் பொதுமக்களுக்கு நடத்திக் காட்டி விளக்கம் அளித்தனர். மேட்டுப்பாளையத்தில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகளை விரட்ட முயலும் உள்ளூர் மக்கள்எங்கள் பணியை செய்ய விடுங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என வனத்துறை மற்றும் காவல்துறை இனைந்து விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளனகுறிப்பாக மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதை மற்றும் கோத்தகிரி மலைப்பாதை ஆகிய இடங்களில் காட்டு யானைகள் அதிக அளவில் நடப்பதுடன் அப்போது சாலைகளை கடந்து ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயரும் அப்படியிருக்கும் சூழ்நிலையில் யானைகள் சில நேரங்களில் வனச்சாலையை ஒட்டி இருக்கக் கூடிய விவசாய தோட்டங்களுக்குள்ளும் கிராம பகுதிகளுக்குள்ளும் செல்கிறதுஅப்படிப்பட்ட சூழ்நிலையில் யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் போது சிலர் யானைகளை தாங்களாகவே விரட்ட முயற்சிக்கின்றனர்சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களே பட்டாசுகள் வெடித்து விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர் இதனால் யானை மனித மோதல் ஏற்படுகிறதுமேட்டுப்பாளையத்தில் உதகை சாலை குன்னூர் சாலைகளை யானைகள் கடக்கும் போது ஏராளமான பொதுமக்கள் கூடிய நின்று அதனை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்இதனால் இயல்பாக செல்லும் யானைகள் கவனம் சிதறி விவசாய நிலங்களுக்கும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது எனவே யானைகள் விவசாய தோட்டத்திற்குள் கிராமங்களுக்குள்ளோ வந்தால் பொதுமக்கள் யானையை விரட்ட முயற்சிக்க வேண்டாம் வனத்துறைக்கு தகவல் அளிக்க கோரி இன்று வனத்துறை மற்றும் காவல்துறை இனைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்யானைகள் அதிகமாக சாலையை கடக்கும்மேட்டுப்பாளையம் உதகை சாலை,கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள ஊமப்பாளையம் மற்றும் யானை நடமாட்டம் உள்ள குரும்பனூர் போன்ற கிராமங்களிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்மேலும் யானைகள் கிராமப்பகுதிகளில் வரும் போது அதன் நடமாட்டம் குறித்து தகவல் தருமாறும் பட்டாசுகள் வெடித்து விரட்ட முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.