• Fri. Apr 18th, 2025

மதுரை எம்.ஆர்.எம். அரிசி ஆலையில் சுதந்திர தின விழா!

By

Aug 15, 2021

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான எம்.ஆர்.எம். அரிசி ஆலை இயங்கி வருகிறது, இங்கு 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இன்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எம்.ஆர்.எம். அரிசி ஆலையிலும் விழா கொண்டாடப்பட்டது. அரிசி ஆலையில் பொறியாளராக பணியாற்றி வரும் உசைன் இப்ராகிம் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டன.