மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் R.V.D. ராமையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் 200க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் வரதராஜன் மதுரை மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்குமார் மனித உரிமை துறை மாநில பொது செயலாளர் P.J. காமராஜ் பஞ்சாயத்துராஜ் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து தேமுதிக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
பா பாலச்சந்திரன், மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர .V.P.R.செல்வக்குமார் அவர்களின் தலைமையில் விளக்கு தூண் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மேலும் 200க்கும் மேற்ப்பட்ட பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தங்கை வழி பேரன் ஈஸ்வரன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத்தொடர்ந்து அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை வெங்கல கடை தெரு கிளையின் சார்பில் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் மதுரை மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத்தொடர்ந்து காமராஜர் அறநிலையம் சார்பில் எஸ் கே மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து ஜனதா தளம் கட்சியின் சார்பில் செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு பொங்கல் வழங்கினார் இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வில்லவன்கோதை தலைமையில் மாவட்ட செயலாளர் கதிரவன் மற்றும் முதன்மை செயலாளர் பாவரசு மற்றும் கணியமுதன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.