
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம் தாலுகா தலைவர் அழகு சுந்தரி தலைமை தாங்கினார். செயலாளர் மல்லிகா கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் மேனகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் மாரியப்பன், தாலுகா குழு உறுப்பினர் பாலு கண்டன உரையாற்றினர். தாலுகா செயலாளர் குணசீலன் நிறைவுரையாற்றினார்.
பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் கேஸ் சிலிண்டர் இருசக்கர வாகனத்தை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
