பட்டி மன்ற பேச்சாளராக பிரபலமானவர் பாரதி பாஸ்கர். தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை, சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதி பாஸ்கர் விரைவில் பூரண நலம்பெற பிரார்த்திப்பதாக பிரபலங்களும், பட்டிமன்ற ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.