திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே மூடப்படாமல், எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் பாரதியார் தெருவில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் அவ்வழியே சென்ற டெலிவரி பாய் இரு சக்கர வாகனத்துடன் குழியில் தவறி விழுந்தார்.
குழியில் தண்ணீர் தேங்கிய நிலையில் ஆழமாக தோண்டப்பட்ட இருந்ததால் டெலிவரி பாய் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து இளைஞரைக் காப்பாற்றியதுடன், தண்ணீரில் மூழ்கிய இரு சக்கர வாகனத்தையும் கயிறு கட்டி மீட்டெடுத்தனர். மேலும் குழியில் விழுந்த இளைஞர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உடனடியாக பள்ளத்தை மூடாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இன்று மாலை பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் மண் கொண்டு மூடப்பட்டது.